நீலப்பட நடிகை புகைப்படத்துடன் பயண அட்டை; நான்கு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (15:40 IST)
தைவானில் ஜப்பானிய நீலப்பட நடிகையின் படங்கள் பதிக்கப்பட்ட பேருந்து-ரயில் பயண அட்டைகள் விற்பனைக்கு வந்து நான்கே மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன.
 
 
தைபெய் நகரத்து ரயில்களிலும் பேருந்துகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய இந்த பயண அட்டைகளின் அறிமுகத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. நடிகை யூய் ஹட்டானோ ஆடைகளுடன் காணப்பட்ட அந்த பயண அட்டைகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
 

 
பல கடைகள் அவற்றை விற்பதற்கும் மறுத்திருந்தன. அதனால் அந்த அட்டைகளை தயாரித்திருந்த கம்பனி, தொலைபேசி மூலம் மட்டும் அவற்றை விற்க முன்வந்திருந்தது.
 
இந்த பயண அட்டை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை சமூகத் தொண்டுப் பணிகளில் செலவிடவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :