வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:25 IST)

எவர்க்ரீன் கப்பலை விட முடியாது: சூயஸ் கால்வாய் நிர்வாகத்தின் அறிவிப்பால் பரபரப்பு!

சமீபத்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர்கிரீன் என்ற கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட நிலையில் அந்த கப்பலை விட முடியாது என சூயஸ் கால்வாய் நிர்வாகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் என்ற கப்பல் திடீரென புயல் காரணமாக சிக்கிக்கொண்டது. இதனால் கால்வாயில் இரு பக்கங்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக செல்வதற்காக காத்திருந்தன. இதனால் மில்லியன் கணக்கில் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எவர்கிரீன் கப்பல் நிர்வாகம் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டும் என்றும் இழப்பீடு தரும் வரை அந்த கப்பலை விட முடியாது என்றும் சூயஸ் கால்வாய் நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
எவர்க்ரீன் கப்பல் நிர்வாகம் தங்களுக்கு இழப்பீடு கொடுக்கும் வரை கப்பலை ஒரு இன்ச் கூட நகர விடமாட்டோம் என எகிப்து அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதை அடுத்து இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.