வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (13:26 IST)

இளம்பெண்ணின் சதையை திண்ணும் பாக்டீரியா

கம்போடியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோசமான பாக்டீரியாவின் தாக்குதலால் முகத்தின் பாதி பக்கத்தை இழந்து தவிக்கிறார்.


 

 
கம்போடியாவை சேர்ந்த சுத் ரெட்(18) என்பவர் உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் சுத் ரெட்டின் முகத்தில் ஒரு அறிகுறி ஏற்பட்டுள்ளது.
 
பின்னர் பாக்டீரியா தனது வேலையை காட்டியுள்ளது. இதனால் சுத் ரெட்டின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துள்ளது. அந்த பாக்டீரியா அவரது முகத்தில் இருந்த சதைகளை அரித்து திண்ண தொடங்கியது.
 
இந்த பாக்டீரியா ஒரு சிறுவெட்டுக்காயம் இருந்தால் கூட உடனடியாக பரவக்கூடிய கொடிய நோய் என்று கூறப்படுகிறது. இந்த நோய் தாக்கினால் ஐந்தில் இரண்டு பேர் உயிரிழந்துவிடுவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது சுத் ரெட்டி உயிருக்கு போராடி வருகிறார்.
 
இந்த வகையான பாக்டீரியா தாக்குதலை சைனஸ் இன்பெக்சன் என்று கூறுகின்றனர்.