செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (19:56 IST)

மனைவிக்காக தினம் 31 மைல்கள் நடந்து சென்று வேலை செய்து வரும் 61 வயது முதியவர்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும், மனைவியின் மருத்துவச் செலவுக்காகவும், அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வறுமையின் காரணமாக 35 மைல் தூரம் நடந்து சென்று பணியாற்றி பணம் சம்பாதிப்பவர் தான் ஸ்டீவன் சிம்ஓப். இவரின் வயது 61.
 
ஸ்டீவன் சிம்ஓப் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டேவிஸ் நகரத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு இருதய நோய் இருக்கிறது. இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது. அவரது மருத்துவ செலவுக்காகவும், அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலும், இந்த வயோதிக காலத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஸ்டீவனுக்கு ஏற்பட்டுள்ளது.
 
மனைவியின் மீது தீராத காதல் கொண்டுள்ள ஸ்டீவன் இதற்காக சூதாட்ட கிளப் ஒன்றில் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அந்த கிளப், ஸ்டீவன் வசித்து வரும் இடத்தில் இருந்து 35 மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த தூரத்தைக் கடக்க பஸ்சில் சென்று வருவதாக இருந்தால், சம்பாதிக்கும் தொகையில் கால் பகுதி, அதற்கே செலவாகிவிடும் என்பதால், தினமும் 35 மைல் தூரத்தையும் நடந்தே கடந்து வருகிறார்.
 
இரவு 11 மணி அளவில் ஸ்டீவன் சிம்ஓப் பணியில் இருந்தாக வேண்டும். எனவே அவர் தன் வீட்டில் இருந்து மதியம் 3.30 மணியளவில் கிளம்பி விடுகிறார். அங்கிருக்கும் நெடுஞ்சாலையில் பனி, மழை, வெயில், காற்று எதையும் பொருட்படுத்தாமல் தன் நடைபயணத்தை தொடர்கிறார். சுமார் 7 மணி நேரம் நடந்து, தான் வேலை செய்யும் இடத்தை அடைபவர், பணி முடிந்ததும் மீண்டும் நடந்தே வீடு வருகிறார். மனைவியின் உடல் நலனின் அக்கறை கொண்ட இந்த முதியவரின் செய்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.