இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - இலங்கை அரசு மேல்முறையீடு

ltte
இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்
siva| Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (19:17 IST)
விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் தடை விதித்துள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்தது

இதனை அடுத்து இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தியாவிலும் விடுதலைப் புலி அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்
இந்தநிலையில் இலங்கையின் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த வழக்கின் போக்கை இலங்கை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் விடுதலைப்புலிகள் மற்றும் அது சார்ந்த அமைப்புக்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

எனவே விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது எதிர்த்து இலங்கை அரசு இங்கிலாந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று இலங்கை தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :