இலங்கை தமிழர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதம்


Last Modified செவ்வாய், 29 மார்ச் 2016 (06:30 IST)
சிறப்பு முகாமில் உள்ள 14 இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள 14 இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி, தமிழகம் வந்த போது இலங்கைத் தமிழர்கள் 16 பேரை காவல்துறை கைது செய்து, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்துவைத்துள்ளனர். 
 
இந்த நிலையில், இதில், பெரும்பாலானவர்கள் மீது வழக்குகள் முடிவடைந்த நிலையிலும், சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக இங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும், சிறப்பு முகாமில் இருந்து தங்களை உடனே விடுதலை செய்யக் கோரி, அவர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :