இலங்கை கடல் பகுதியில் தங்கம் கடத்திய மீனவர்கள்: 2 பேர் கைது

இலங்கை கடல் பகுதியில் தங்கம் கடத்திய மீனவர்கள்: 2 பேர் கைது


Caston| Last Modified செவ்வாய், 8 மார்ச் 2016 (09:48 IST)
இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி படகில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 
 
இலங்கை வடக்கு யாழ்ப்பானம் மடகல் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு மீன்பிடி படகை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
 
உடனே இலங்கை கடற்படையினர் படகில் இருந்து 6.94 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 2 கோடி என கூறப்படுகிறது.
 
இவர்கள் கூலிக்கு இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் தங்கத்தையும் இலங்கை கடற்படையினர் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :