வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 30 அக்டோபர் 2014 (17:24 IST)

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இதேபோல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
நவம்பர் 14 ஆம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குற்றவாளிகள் தரப்பில் அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், ஸ்ரீகாந்த் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகினர். கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.