வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (14:08 IST)

சிறிசேனா அரசு எனது ஆதரவாளர்களை பழிவாங்குகிறது: ராஜபக்சே குமுறல்

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனது ஆதரவாளர்களை பழிவாங்குகிறது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
இலங்கை நிதித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர விசாரணை செய்யப்பட்டார். இந்த விசாரணை பல மணிநேரம் நீடித்தது. ஜெயசுந்தர  தனது பதவி காலத்தில் எரிபொருள் உடன்படிக்கையின் போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி ஜெயசுந்தர மீது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
சில திங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவாட் கப்ராலும் விசாரணை செய்யப்பட்டார். அதேபோல, பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் அசந்தா டி மெல்லும் விசாரணை செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், இவ்வாறு நடத்தப்படும் விசாரணை உள்ளிட்ட பல வகைகளில் தனது ஆதரவாளர்களை திட்டமிட்டு புதிய அரசு பழிவாங்கி வருகிறது என ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.