1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. some fishes are spreading cancer to another fish

கேன்சரை பரப்பும் கெளுத்தி மீன்கள்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

fish cancer
உலகில் பல வகையான மீன்கள் உள்ளன. பொதுவாகவே உலகம் முழுவதும் மக்கள் மீன் இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக சீனா, ஜப்பான் மக்கள் அதிக அளவில் மீன் இறைச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்தியாவிலும் பரவலான மக்கள் மீனை விரும்பி உண்கிறார்கள்.

இந்நிலையில்தான், மீன்கள் மூலம் புற்றுநோய் பரவும் அதிர்ச்சி செய்தி தெரிய வந்திருக்கிறது. உலகில் முதன்முறையாக கேன்சரை பரப்பும் காட்டு கெளுத்க்தி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகளில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில் ஒரு மீனிலிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாக புற்றுநோய் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் நேரடியாக ஒன்றிலிருந்து மற்றொரு மீனுக்கு பரவுவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதேநேரம் இந்த மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
போக்குவரத்து விதியை மீறினால் இனி ஸ்பாட் ஃபைன் கிடையாது.. ஆன்லைன் அபராதம் தான்..