வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2016 (15:42 IST)

ஷேன் வார்னே-வை கடித்த அனகோண்டா பாம்பு: டிவி நிகழ்ச்சியில் நடந்த விபரீதம் (வீடியோ இணைப்பு)

ஷேன் வார்னே-வை கடித்த அனகோண்டா பாம்பு: டிவி நிகழ்ச்சியில் நடந்த விபரீதம் (வீடியோ இணைப்பு)

ஓய்வு பெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பது வீச்சாளர் ஷேன் வார்னே-வை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் அனகோண்ட கடித்துள்ளது.


 
 
நெட்வொர்க் டென் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள “I’m A Celebrity... Get Me Out Of Here!” என்ற அந்த நிகழ்ச்சியில் முன்னோட்ட விளம்பர வீடியோவில், 46 வயதான சுழற்பந்து வீச்சாளர் சேன் வார்னேவை அனகோண்டா ஒன்று தலையில் கடிக்கிறது.
 
நெட்வொர்க் டென் என்ற தொலைக்காட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும் போது இளம் அனகோண்டா ஒன்று ஷேன் வார்னேவை கடித்தது. அந்த பாம்பு மிகவும் கொடிய விஷத்தன்மை உள்ள பாம்பு அல்ல எனினும் அது மிகவும் ஆக்ரோஷ்மானது என்றார்.

 

 
 
அனகோண்டாவுக்கு 100 மிகவும் கூர்மையான பற்கள் உள்ளன. இது ஒரு முறை கடிப்பது 100 மிகவும் கூர்மையான ஊசியால் குத்துவதற்கு சமம் என கூறப்படுகிறது.
 
பாம்பு கடிபட்ட ஷேன் வார்னே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், அவரது தலையில் பாம்பு கடித்த இடத்தில் சிறிய தடம் இருப்பதாகவும், அது நிரந்தரமாக இருக்காது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஸ்டீபன் டேட் கூறும் போது, பாம்பு கடித்த பின்பும் ஷேன் வார்னே எந்த பயமும் இல்லாமல் நிகழ்ச்சியின் அடுத்தக்கட்டத்துக்கு தைரியமாக சென்றார் என கூறினார்.