வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 7 மார்ச் 2015 (19:52 IST)

கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு 200 சவுக்கடி வழங்கப்பட்ட கொடுமை

சவுதி அரேபியாவில் பெண்கள் 7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட 19 வயது பெண் ஒருவருக்கு சரியத் சட்டப்படி 200 சவுக்கடிகளும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபட்டு உள்ளது.
 
சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல கூடாது என சட்டம் உள்ளது. அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக சென்று உள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளது.
 
இந்த சம்பவம் கடந்த 2006 இல் நடந்து உள்ளது. 2 ஆண்கள் அந்த பெண்ணுக்கு வாகன வசதி செய்து கொடுப்பதாக கூறி தனியான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து 7 பேர் கற்பழித்து உள்ளனர்.
 
மேலும், அவரது நண்பரை 3 பேர் அடித்து உதைத்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது. கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.
 
ஆனால் பாதிக்கபட்ட பெண்ணின் பெண் வக்கீல் வழக்கை சவுதி பொது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் அங்கு பெண்ணுக்கு அதிகமான தண்டனை வழங்கபட்டது. பெண்ணுக்கு தண்டனை இரட்டிப்பாக்கபட்டது ஆனால் ஆணுக்கு அதே தண்டனை வழங்கபட்டு உள்ளது.  
 
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றதோடு மட்டுமல்லாமல், சவுதி அரேபிய அரசு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது. பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.