ஏர் ஏசியா விமானத்திலிருந்து 46 உடல்கள் மற்றும் உடைந்த பாகங்கள் மீட்பு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 3 ஜனவரி 2015 (18:49 IST)
ஜாவா கடல் பகுதியில் உடைந்து விழுந்த விமானத்திலிருந்து 46 உடல்கள் மற்றும் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நகருக்கு இன்று காலை 155 பயணிகள் மற்றும் 6 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவுடன் ஏர் ஏசியா விமானம் (எண் QZ8501) புறப்பட்டது.
 
 
இந்த விமானம் புறப்பட்டு 42 நிமிடங்களில் கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானது. தகவல் பறிமாற்றம் துண்டிக்கப்பட்டதாவும், விமானம் வழக்கமான ஒடு பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
பின்னர் விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து உள்ளது தெரிய வந்தது. ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனர் கூறுகையில், ”எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தையும் விமானத்தின் பெரிய பாகங்கள் இரண்டையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். நாங்கள் தேடிக்கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் தான் இவை என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.
 

 
விமானம் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கபூர் செல்லும் வழியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. கொடுக்கப்பட்ட கால அட்டவணைதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
 
தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் இதுவரை 46 உடல்களை மீட்டு உள்ளனர். மற்ற உடல்கள் விமானத்தின் உள்பகுதியில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை கைப்பற்றிய உடல்களில் இருந்து 4 பேர் அடையாளம் காணபட்டு உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :