வேலையில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.. இந்திய பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்த Realme நிறுவனம்..
கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்போவின் துணை பிராண்டாக அறிமுகமாகி, பின்னர் தனி நிறுவனமாக பிரிந்த Realme, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒப்போவின் குடையின் கீழ் வரவுள்ளது. இந்த வணிக மறுசீரமைப்பு காரணமாக, Realme இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல Realme பணியாளர்களுக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தங்கள் பதவிகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையற்ற நிர்வாகச் செலவுகளை குறைக்கவும், ஒப்போவின் வலுவான விற்பனை மற்றும் சேவை மைய கட்டமைப்பை பயன்படுத்தி கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த இணைப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை மற்றும் சீரான மென்பொருள் அப்டேட்கள் கிடைக்கும் என Realme தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva