செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (08:53 IST)

ட்ரம்போடு பேசுவதற்கு தயார்.. ஆனால்..? - முதல்முறையாக பதில் பேசிய கிம் ஜாங் உன்!

ட்ரம்போடு பேசுவதற்கு தயார்.. ஆனால்..? - முதல்முறையாக பதில் பேசிய கிம் ஜாங் உன்!

வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

 

கடந்த பல ஆண்டுகளாக வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை என ஈடுபட்டு வரும் நிலையில், அதை கண்டித்து வந்த அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனைகளை செய்து வருகிறது.

 

அதுமட்டுமல்லாமல் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பானுடனும் மோதல் போக்கை வடகொரியா தொடர்ந்து வரும் நிலையில் போர் மூளலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது, இந்நிலையில்தான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.

 

ஆனால் ட்ரம்ப் முதலாவதாக அணு ஆயுத சோதனை நிறுத்தத்தைதான் வலியுறுத்துவார் என்பதை கணித்த கிம் ஜாங் உன் “அணு ஆயுத சோதனையை நிறுத்தச் சொல்லி ட்ரம்ப் வற்புறுத்தாவிட்டால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார். 

 

Edit by Prasanth.K