1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (05:19 IST)

பிரதமரின் வாகனம் மீது முட்டைகளை வீசி தாக்கிய பொதுமக்கள்

ஏவுகணை திட்டத்தை கைவிட கோரி பிரதமரின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.


 


வடகொரியாவை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய அரசு நவீனமாக்கப்பட்ட ஏவுகணை திட்டத்தை அமெரிக்க உதவியுடன் சியாங்ஜூ பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தது. இந்த ஏவுகணை திட்டத்தால் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த பகுதி கிராம மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது. எனவே, இந்த திட்டத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து விளக்கம் அளிக்க அந்நாட்டு பிரதமர் வாங் கியோ ஆன் அந்த பகுதிக்கு சென்றார். அந்த கிராம மக்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் முயன்றார். அவரது விளக்க உரையை கேட்காமல் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அத்துடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பிரதமரின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசியும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதை அடுத்து, பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி பிரதமரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.