வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2015 (01:20 IST)

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
 

 
இலங்கையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொழும்புவில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
ஒன்றுப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ். தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு நிச்சயம் அளிக்கப்படும். இறுதிக் கட்டப் போர் நடந்த பகுதியில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், தேர்தலுக்குப் பின்பு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
 
பதவியில் இருந்து உங்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சே ஆட்சி அதிகைரத்தை கைப்பற்ற மீண்டும் மாற்றுப் பாதையில் முயற்சி செய்கிறார். ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது மக்களின் எதிர்காலம் இருண்டடகாலமாக மாறிவிடும். இதனால் தான், இந்த தேர்தல் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்கிறேன். எனவே, நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.