1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2016 (09:48 IST)

2,116 கர்ப்பிணிகளை பாதித்துள்ள ஜிகா வைரஸ்: கொலம்பியாவில் அதிர்ச்சி

கொலம்பியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பாதித்துள்ள ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ் கொலம்பியாவிலுள்ள 2,116  கர்ப்பிணி பெண்களை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


 

 
பிரேசிலில் இருந்து பரவ தொடங்கிய ஜிகா வைரஸ் தற்போது மத்திய அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த  வைரஸ் நோய் கர்ப்பிணி பெண்களை தாக்கினால் அதை கண்டறிவது கடினம் என்றும், அவ்வாறு வைரஸ் தாக்கப்பட்டு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும் பிறவிக்குறைபாடுடனும் பிறக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
 
இந்நிலையில் கொலம்பியாவில் 2,100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஜிகா வைரஸ் குறித்து அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் கொலம்பியாவில் 20,297 பேரை ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இவர்களுள் 2,116 பேர் கர்ப்பிணி பெண்கள் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜிகா வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. கொசுக்கள் மூலம் பரவக்கூடிய இந்த நோய் உலகம் முழுவதும் 40 லட்சம் பேரை தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டுவரையில் இந்த நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் பெண்கள் கர்ப்பம் தரிக்கவேண்டாம் என்று எச்சரிக்ககை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத.