ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோவில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது; நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், நிலைமையை உடனடியாக மதிப்பிடுமாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது
மனித உயிர்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளில் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது
இதன் காரணமாக குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
Edited by Siva
