1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (13:36 IST)

பிரபல இணைய தளங்கள் முடக்கம்

உலக அளவில் பிரபலமான பல இணைய தளங்கள் வியாழக்கிழமை முடங்கியது இணையவாசிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 

 
உலக அளவில் பிரபலமான பல இணைய தளங்கள் வியாழக்கிழமை முடங்கின. முடக்கத்தை சந்திக்கும் இந்த தளங்களில் உள்நுழைய முயன்றவர்கள் டி.என்.எஸ். கோளாறு ஏற்பட்டிருப்பதாக தகவலைப் பார்க்க நேர்ந்தது. இதன் பொருள் இந்த தளங்களைத் திறக்கவேண்டும் என்ற பயனர்களின் வேண்டுகோள் அந்த தளங்களை அடைய முடியவில்லை என்பதாகும்.
 
Airbnb, UPS, HSBC வங்கி, பிரிட்டீஷ் ஏர்வேஸ் மற்றும் ஆன்லைன் விளைட்டுத் தளங்கள் இப்படி பாதிக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் அடங்கும். ஆனால், பல தளங்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டன.
 
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில், குறிப்பிட்ட இணைய தளத்தின் தரவுகளை வைத்திருக்கும் கணினியின் முகவரியை சாதாரணமாக மனிதர்கள் படிக்கத் தகுந்த முகவரியாக, எடுத்துக்காட்டாக, bbc.com, மாற்றுவதுதான் டொமைன் நேம் சிஸ்டம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் டி.என்.எஸ். ஆகும்.