தவறி கீழே விழுந்த போப் ஆண்டவர்: நலமாக இருப்பதாக வாடிகன் தகவல் (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: வெள்ளி, 29 ஜூலை 2016 (13:23 IST)
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என கூறப்படும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் போலந்தில் நடந்த திருப்பலியின் போது தவறி கீழே விழுந்தது பெருந்திரளான கூட்டத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

 
 
உலகின் மிக முக்கியமான மதத்தலைவர்களில் போப் ஆண்டவர் முக்கியமானவர். இவரை காண தினமும் பெருந்திரளான மக்கள் கூட்டம் வரும்.
 
போலந்து நாட்டிற்கு சென்றிருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் தூபம் காட்டிக்கொண்டு பீடத்தில் இருந்து பொது வெளிக்கு வரும் போது தடுமாறி கீழே விழுந்தார். இடையில் படிக்கட்டு இருப்பதை கவனிக்காமல் வந்ததால் அவர் தவறி கீழே விழ நேர்ந்தது.
 
உடனடியாக அவரை எழுப்பி விட உதவினர் அருகில் இருந்தவர்கள். பின்னர் எழுந்து தொடர்ந்து திருப்பலியை நடத்தினார். இந்நிலையில் அவர் போலந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
 
ஆனால் போப் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாக வாடிகன் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :