1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (18:14 IST)

”சிறுவனை பார்த்தபோது உயிருடன் இருக்க இறைவனை வேண்டினேன்” - இறந்த சிறுவனை மீட்ட போலிஸ் தகவல்

சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்” என்று சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி காவல்துறை அதிகாரி மெக்மெட் கிப்லக் தெரிவித்துள்ளார்.


 

சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். அப்போது, துருக்கியில் படகுகள் மூழ்கியதால் அயிலன் குர்தி உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர். 
 
மேலும், கடந்த புதன் கிழமையன்று துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
 

 
இந்நிலையில், “சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்” என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி காவல்துறை அதிகாரி மெக்மெட் கிப்லக் தெரிவித்துள்ளார்.
 
துருக்கியில் கடலில் பலியாகிக் கிடந்த குழந்தை அய்லன் சடலத்தை எடுத்த காவல்துறை அதிகாரி மெக்மெட் சிப்லக் இது தொடர்பாக கூறுகையில், “என்னுடைய சொந்த மகன் என்றே நினைத்தேன். சிறுவனை பார்த்ததும் அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.
 
சிறுவன் உயிருடன் இருப்பான் என்றே நம்பினேன். ஆனால் சிறுவன் சடலமாக கிடந்தான். நான் அழுதுவிட்டேன். எனக்கும் 6 வயதில் மகன் உள்ளான். சிறுவனை பார்த்ததும் என்னுடைய மகனை போன்றே நினைத்தேன். என்னுடைய துன்பத்தை கூறுவதற்கு வார்த்தையே கிடையாது. மிகவும் சோகமாக இருந்தது” என்றார்.
 
மேலும், ”சிறுவனின் உடலை தூக்கி எடுத்த போது எனக்கு புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. நான் என்னுடைய பணியைதான் செய்தேன்” என்றும் மெக்மெட் குறிப்பிட்டுள்ளார்.