செப்டம்பர் 23: அரசு முறைப்பயணமாக அயர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி


K.N.Vadivel| Last Modified செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (01:48 IST)
அயர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பிரமதர் மோடி அரசு முறைப்பயணமாக செப்டம்பர் 23 ஆம் தேதி செல்கிறார்.
 
 
அயர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 7 நாள் அரசு முறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை செல்கிறார். முதலில் 23 ஆம் தேதி அன்று அயர்லாந்து செல்லும் பிரமதர் மோடி, அந்த நாட்டுப் பிரதமர் என்டா கென்னியை சந்தித்து உரையாடுகிறார்.
 
பின்பு, செப்டம்பர் 24ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அடுத்து, 25 ஆம் தேதி ஐ.நா. சபையில், ஐ.நா. நிலையான வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ளும் ஐ.நா. அமைதி பாதுகாப்புப் படை மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.
 
இதனையடுத்து, செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்கிறார். அங்கு கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்த உள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :