வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (18:42 IST)

பெண்களை கடத்தி அரண்மனைகளில் உல்லாசம் : வட கொரிய அதிபரின் சொகுசு வாழ்க்கை

ஐ.நா மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு பணியாமல், அவ்வப்போது அனு ஆயுத சோதனை செய்து உலக நாடுகளை மிரட்டு வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ரகசிய வாழ்க்கை தற்போது அம்பலமாகியுள்ளது.


 

 
இவருக்கு முன் வட கொரிய அதிபராக இருந்தவர் அவரின் தந்தை கிங் ஜாங் இல். இவர் எப்போதும் பள்ளி மாணவிகளையே குறி வைப்பாராம். ராணுவ அதிகாரிகளை அனுப்பி அவர்களை வரவழைப்பாராம். அவர்களோடு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கென்றே வட கொரியாவில் 17 அரண்மனைகளை அவர் கட்டியிருக்கிறார்.
 
அவர்களோடு உல்லாசம் அனுபவிப்பது போக, அவர்களை வீட்டு வேலைக்கும் பயன் படுத்தியுள்ளார். வட கொரிய மக்கள் வறுமையில் தவித்த போது, அவர் அரண்மனையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
 
தற்போது அவருடைய மகன் கிங் ஜாங் உன் வட கொரிய அதிபராக இருக்கிறார். அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பயமுறுத்துவது, தன்னை எதிர்ப்பவர்களை கொன்று விடுவது என்பது இவர் பாணி.


 

 
தற்போது தன்னுடைய தந்தை போலவே இவரும் மாறி விட்டாராம். தந்தைக்கு பள்ளி மாணவிகள் என்றால், இவருக்கு அழகாகவும், உயரமாகவும் இருக்கும் பெண்கள்தான் மிகவும் பிடிக்குமாம். 
 
தந்தை போலவே ராணுவ அதிகாரிகள் மூலம், பெண்களை வரவழைத்து அந்த 17 அரண்மனைகளில் சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறாராம்
 
அவரின் தந்தையால் கடத்தப்பட்டு 2010ஆம் ஆண்டு வடகொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்ற மேரி கிளாரி என்ற பெண்தான் இந்த உண்மைகளை தற்போது வெளியே கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்