வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 ஜனவரி 2015 (18:04 IST)

'பாகிஸ்தான் எங்களது ஈடு இணையற்ற நண்பன்' - சீனா புகழாரம்

பாகிஸ்தான் எந்த காலத்திலும் எங்களது ஈடு இணையற்ற நண்பன் என்று சீனா புகழாரம் சூட்டியுள்ளது.
 
சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி ரஹீல் ஷெரீப் சீன வெளியுறவுத் துறை அதிகாரி வாங் யி-உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
 

 
இது குறித்து பொது உறவுகளுக்கான உள்சேவை பொது மேலாளர் மேஜர் ஆசிம் பாஜ்வா பேசுகையில், “பாகிஸ்தான் எந்த காலத்திலும் எங்களது ஈடு இணையற்ற நண்பன் என்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களது கவலைகளை ஒரே சமூகத்தின் பகுதியாக கருதும்” என்று வாங் யீ கூறியதாக குறிப்பிட்டார்.
 
மேலும் ஜெங்செங் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான் சீனாவின் மிகவும் நம்பகமான கூட்டாளி. பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் சீனா அரசு உதவ தயாராக இருக்கிறது” என்றார்.
 
சீனா சென்றுள்ள பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்,  இந்தப் பயணத்தின்போது சீனா, பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ரீதியிலான முக்கிய நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன.
 
அவற்றுள் முக்கியமாக, நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு கொள்கை, பாதுகாப்பு விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் ஆகியவை குறித்து சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.