வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 9 மே 2015 (12:10 IST)

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 தூதர்கள் உள்பட 6 பேர் பலி

பாகிஸ்தானில் வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 தூதர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
 

 
பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாட்டின் தூதர்கள் இன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சென்ற 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், 3-வது ஹெலிகாப்டர் நல்தார் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளி கட்டிடம் மீது விழுந்து தீப்பிடித்தது.
 
இந்த ஹெலிகாப்டரில், 11 வெளிநாட்டவர்கள் மற்றும் 6 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். இவர்களில் நார்வே தூதர் லெயிப் எக் லார்சன், பிலிப்பைன்ஸ் தூதர் டொமினிகோ டி லுசனாரியோ, மலேசியா மற்றும் இந்தோனேசிய தூதர்களின் மனைவிமார்கள் மற்றும் 2 பைலட்டுகள் என 6 பேர் பலியாகினர். போலந்து மற்றும் நெதர்லாந்து தூதர்கள் படுகாயம் அடைந்தனர்.
 
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.