வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 6 நவம்பர் 2014 (11:41 IST)

பொம்மை வெடிகுண்டு: பாகிஸ்தானில் 3 சிறுவர்கள் பலி

பாகிஸ்தானிலுள்ள நரோவல் மாவட்டம் துஹல்புரா கிராமத்தில் 3 சிறுவர்கள் பொம்மை  வெடிகுண்டு வெடித்ததால் உடல் சிதறி உயிரிழந்தனர்.
 
லாகூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரோவல் மாவட்டம் துஹல்புரா கிராமத்தில் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டுருந்தனர்.
 
அப்போது அதில் ஒரு பொம்மை வெடித்து சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது பொம்மை இல்லை என்றும், சிறிய ரக பீரங்கி வெடி குண்டு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சாப் மாகாண அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள வாகா எல்லைப்பகுதியில் கடந்த 2 ஆம் தேதி தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில் அதே பஞ்சாப் மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியதில் அப்பாவி சிறுவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.