வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (16:50 IST)

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி 2ஆவது இடம்: ஐ.நா அறிக்கை

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது.

ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது.

1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டில் 37 மில்லியனாக குறையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் தற்போது 25 மில்லியனாக உள்ள மக்கள் தொகை, 2030 ஆம் ஆண்டில், 36 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.