1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2015 (13:45 IST)

சொந்த வேலையை மட்டும் கவனிக்க வேண்டும் - சீனா ஜப்பானுக்கு எச்சரிக்கை

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதி என்று கூறியுள்ள ஜப்பானை, சீனா சொந்த வேலையை மட்டும் கவனிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
 
சீனா இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வருவதும், எல்லைப் பகுதியில் சாலை அமைப்பதும், ரானுவ ஊடுருவலையும் நிகழ்த்தி வருகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி வந்திருந்த ஜப்பான் நாட்டின்  வெளியுறவுத் துறை மந்திரி கிஷிடா, ”இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தாயார், ஆனால் அருணாசல பிரதேசத்தில் முதலீடு செய்யப்பட மாட்டாது. 
 
ஆனாலும், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஜப்பான் பார்க்கிறது” என்று கூறியிருந்தார். ஜப்பான் வெளியுறவுத் துறை மந்திரியின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ”இந்தியா-சீனா நட்புறவில் தலையிடுவதற்கு பதிலாக ஜப்பான் தனது சொந்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். 
 
மேலும், ‘நாங்கள் இதுபற்றி மிகவும் கவலை கொண்டுள்ளோம், சீன-இந்திய எல்லைப் பிரச்சினையை ஜப்பான் முழுமையாக புரிந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனையை தீர்க்க இருபுறமும் எடுக்கப்படும் முயற்சியை மதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.