வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (21:50 IST)

ஓரினச் சேர்க்கையே டைனோசர்களின் அழிவுக்கு காரணம்: பிரபல விஞ்ஞானி தகவல்

டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என்றும் ஓரினச் சேர்க்கை மூலமாகவே அழிந்ததாகவும் பீட்டர்ஸ்பர்க் விஞ்ஞானி கூறுயுள்ளார்.
 

 
சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்துவந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய உயிரினமாக கருதப்படுகிறது. ஆனால், பல மைல் அகலம் கொண்ட ஒரு ராட்சத விண்கல் மோதலால் டைனோசர்கள் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
 
இந்நிலையில், கென்டக்கி பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அருங்காட்சியக பொறுப்பாளரும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான அந்தோணி உதுமான் கூறும் போது டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என்றும் ஓரினச் சேர்க்கை மூலமாகவே அழிந்ததாகவும் கூறுகிறார்
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”பூமியில் வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்கள் விண்கற்களால் அழியவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் அது முக்கிய காரணமில்லை. ஓரினச் சேர்க்கைதான் டைனோசர்கள் அழிவுக்கு வழிவகுத்தது. விண்கற்கள் தாக்குதல்கள் அல்ல.
 
ஊர்வன விலங்குகளிடம் ஓரினச்சேர்க்கை நடைமுறையில் இருந்து உள்ளது. அதே போன்று டைனோசர்களிடமும் ஓரினச் சேர்க்கை இருந்ததாக மரபணு சோதனை மூலம் வரையறுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.