1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 2 மே 2015 (10:44 IST)

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 1000 ஐரோப்பியர்களை காணவில்லை

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 1000 ஐரோப்பியர்களை காணவில்லை என்று நேபாளத்திற்கான ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் ரேன்ஸ்ஜ் டேரின்க் தெரிவித்துள்ளார்.
 
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பாவை சேர்ந்த 1000 பேரை காணவில்லை என்றும், இதுவரை 12 பேர் இறந்துள்ளதாகவும் நேபாளத்திற்கான ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் ரேன்ஸ்ஜ் டேரின்க் தெரிவித்துள்ளார்.
 
மேலும் காணாமல் போனவர்கள் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களையும், மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 6134 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை இருக்கும் என்று நேபாள பிரதமர் கூறியிருந்தார். ஆனால் இடிபாடுகளுக்குள் இன்னமும் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று நேபாள ராணுவ தலைமை தளபதி கவுரவ் ராணா தெரிவித்தார்.