வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 1 டிசம்பர் 2014 (16:08 IST)

நேபாளக் கால்நடைத் திருவிழா - 1லட்சத்திற்கு மேலான உயிர்கள் பலி

நேபாளத்தில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில் 1 லட்சத்திற்கு மேலான உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன.
 
உலகின் மிகப்பெரிய கால்நடை பலியிடும் திருவிழா நேபாளத்தில் வெள்ளிக் கிழமைத் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் 6 ஆயிரம் எருமைகள், 1 லட்சத்திற்கும் மேலான ஆடுகள் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டன.
 

 
நேபாளத்தின் பாரா மாவட்டம், பரியபூர் கிராமத்தில் கதிமாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய கால்நடைப் பலி திருவிழா நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த வெள்ளிக் கிழமைத் தொடங்கியது.
 
ஒரு பன்றி, புறா, வாத்து, சேவல், எலி ஆகியவற்றை கோயில் பூசாரி பலியிட்டு விழாவை தொடங்கி வைத்தார். குழந்தைகள், உறவினர் உட்பட  20 லட்சத்திற்கும் மேலான மக்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
 

 
இது குறித்து யாதவ் என்ற பக்தர் ஒருவர் கூறுகையில், “இது அற்புதமான ஒரு  நிகழ்ச்சி. எனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பான வாழ்விற்காக ஆடுகளை பலியிட எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. நீங்கள் அம்மனை நம்பினாள், அம்மன் உங்களுக்கு அருள்வால்” என்று கூறினார்.

கடந்த 2009ஆம் நடைபெற்ற இத்திருவிழாவில் 2லட்சத்திற்கும் மேலான விலங்குகள், பறவைகள் பலியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.