Arun Prasath|
Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:48 IST)
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.