வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 5 மே 2014 (12:41 IST)

மனிதனுக்கு முன் நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்தை சென்றடையுமென நாசா தகவல்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை ஒரு வழி பயணமாக அனுப்பிவைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் செல்வதற்கு முன்பாக  நுண்ணுயிர் கிருமிகள்  சென்றடையுமென நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தை நாசா விண்வெளி மையம் அனுப்பிவைத்துள்ளது. அங்கு மனிதன் வாழும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை ஒரு வழி பயணமாக அனுப்பிவைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் செல்வதற்கு முன்பாக  நுண்ணுயிர் கிருமிகள் அங்கு சென்றடையுமென நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
அஸ்ட்ரோபையோலஜி என்னும் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வுகள்   "Survival of Rock-Colonizing Organisms After 1.5 Years in Outer Space," "Resistance of Bacterial Endospores to Outer Space for Planetary Protection Purposes" மற்றும்  "Survival of Bacillus Pumilus Spores for a Prolonged Period of Time in Real Space Conditions."

இவற்றில் நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்திற்கு  செல்லும் விண்கலங்களில் பரவி அதன் மூலம் அங்கு சென்றடையும் எனவும், இவற்றை சுலபமாக அழிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.