தொடர்புடைய செய்திகள்
- காஸா உடனான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: இன்னொரு போரை நிறுத்தினாரா டிரம்ப்?
- விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!
- 2047ஆம் ஆண்டு வரை மோடி தான் பிரதமர் வேட்பாளர்.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
- சுதந்திர இந்தியாவின் 100-வது ஆண்டிலும் மோடி தான் பிரதமர்: முகேஷ் அம்பானி வாழ்த்து!
- மோடியின் பிறந்த நாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் பெண் எம்பி விமர்சனம்..!
காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் மோடிக்கும் பங்கு உண்டு: அமெரிக்கா அறிவிப்பு
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய அமைதி ஒப்பந்தத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேச அளவில் பல தலைவர்களின் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த அமைதித் திட்டத்தை ஏற்பதாக கூறியிருக்கிறார். எனினும், ஹமாஸ் அமைப்பினர் அந்த திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த வெற்றிகரமான அமைதி ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் கொண்டு வந்ததாகவும், அதில் அரபு உலகத் தலைவர்கள், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மோடியின் இந்த முயற்சி அங்கீகரிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் ராஜதந்திர உறவுகளுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
