‘கொடுமை’ - கணவனை காண பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிய தாய்

‘கொடுமை’ - கணவனை காண பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிய தாய்


Dinesh| Last Modified ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (12:16 IST)
அமெரிக்க நாட்டின் வாசிங்டனில், கிம்பெர்லி மார்டின்ஸ் (23) என்ற, இளம் பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

 


இந்நிலையில், கணவனை காண நினைத்த கிம்பெர்லி, தன்னுடைய 17 மாத குழந்தைக்கு ஒரு டீஸ்பூன் உப்பு கொடுத்து, தண்ணீரில் வீசியுள்ளார். பின்னர் கடும் காய்ச்சல் காரணமாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதை அடுத்து, குழந்தையை காண மருத்துவமனைக்கு கணவன் மார்ட்டீஸ் வந்துள்ளார். அப்போது குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்ததுள்ளது. குழந்தைக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்த காவல்துறையினர், குழந்தையை கொல்ல முயன்ற குற்றத்திற்காக கிம்பெர்லியை கைது செய்தனர். அவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :