இஸ்ரேல் அணுசக்தி மையம் அருகே ஈரான் ஏவிய ஏவுகணை.. 40 பேர் படுகாயம்.. பெரும் பதட்டம்..!
இஸ்ரேலின் முக்கியமான அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள டிமோனா நகரின் குடியிருப்பு பகுதியில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவ சேவையான மேகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது. ஈரானின் நதான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் ஏவுகணை விழுந்ததில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமை இந்த தாக்குதலைக் கவனித்து வருவதாகவும், இருப்பினும் டிமோனாவில் உள்ள நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அணுசக்தி மையங்களுக்கு அருகிலேயே ஏவுகணைகள் விழுந்து வருவது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய போர் மேகத்தை சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
Edited by Siva
