வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (18:35 IST)

நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

மொபைல் தயாரிப்பு நிறுவனமாகிய, பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியாவை, மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருமானவரி தொடர்பான சர்ச்சைக்கு இடையிலும் இந்த ஒப்பந்தம் இறுதியகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
வருமானவரி தொடர்பான சிக்கலால், நோக்கியாவின் சொத்துகளை வருமான வரித்துறை கடந்த ஆண்டு முடக்கியது. அடுத்த சில நாட்களில் இந்த சிக்கலுக்கு நோக்கியா தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளது.
 
நோக்கியா நிறுவனம், சமீபத்தில் 6,600 நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியது. அதேபோன்று, பயிற்சி பணியாளர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்றும் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் தங்களிடம் உள்ள பணியாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும், நோக்கியா எவ்வாறு தொழிலாளர்களின் தகவல்களை பாதுகாத்து வந்ததோ, அதேபோன்று நாங்களும் பாதுகாப்போம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் கைமாறினாலும் முன்பிருந்த பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.