வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (13:56 IST)

மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது - ஆண்ட்ரே மில்னே

இந்தியா - மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறை நிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்துள்ளார்.
 

 
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
 
மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டது.
 
மேலும் அடுத்த பக்கம்.. 

அமெரிக்கா – தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறியது. மேலும், ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் சென்றவர். விமானம் பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
 
எனினும் விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை. இந்நிலையில் இந்தியா - மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறை நிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்துள்ளார்.
 
விமானம் மாயமானதில் இருந்து நிபுணர் ஆண்ட்ரே மில்னே இதுதொடர்பாக விசாரித்து வந்துள்ளார். அவர் விமானத்தின் உதிரிபாகத்தை இந்தியா - மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் விமானத்தை கண்டுபிடிக்க 1.3 மில்லியன் பவுண்ட் பணம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
வங்காள வரிகுடாவில் மீதம் உள்ள பகுதிகளும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ராணுவ விமான தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்ட்ரே இதற்கு ஆதரவாளர்கள் பணம் வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அவர் பேசுகையில், இந்த பகுதிகளில் தேடப்படவில்லை. விமானத்திற்கு என்ன நடந்தது என்பதில் உண்மையை கண்டுபிடிக்க, வழியினை ஆய்வு செய்ய எனக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகிறது. மாயமான மலேசிய விமானம் குறித்து கேள்விபட்டவர்கள், ஒவ்வொரு நபரது நெஞ்சையும் தொட்டிருக்கும். விமானம் மாயமான விவகாரம் உலகத்தில் உள்ள அனைத்து விமான போக்குவரத்து துறை நிபுணர்களையும் பேசவைத்துள்ளது.
 
விமானத்தில் பயணம் செய்தவர்களை மாயமாக செய்வதன் மூலம் இதுவும் மனித தன்மைக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்ற முறையில் இது என்னுடைய நெஞ்சை தொட்டுள்ளது. விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த துணிகர முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.