பர்கருக்காக அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி


Murugan| Last Modified திங்கள், 9 மே 2016 (17:33 IST)
வீட்டில் தயாரிக்கப்பட்ட பர்கர் உணவுக்காக, சகோதரர்களுக்கிடையே ஏற்பட சண்டையில், அண்ணனை அவரது தம்பி சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 

 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் வசிப்பவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப்(25). சம்பவத்தன்று அவரது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது. அதை பங்கிட்டுக் கொள்வதில் அவருக்கும், அவரது அண்ணன் நிகோலசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
சண்டை முற்றியதில் கோபமடைந்த பெஞ்சமின், நிக்கோலசை கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டு நிக்கோலசின் மார்பில் பாய்ந்தது. அதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிக்கோலஸ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
 
இதையடுத்து அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :