செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : ஞாயிறு, 4 மே 2014 (12:41 IST)

மாயமான விமானம் கடத்தல்? - 11 தீவிரவாதிகள் கைது; விசாரணையில் புதிய திருப்பம்

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பேரோடு புறப்பட்டு சுமார் 8 வாரங்களுக்கு முன் விமானம் மாயமான சம்பவம் தொடர்பாக கோலாலம்பூர் மற்றும் கெடாவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட எம்.எச் 370 விமானம் 239 பேரோடு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மாயமானது. பல நாடுகளின் ஒருங்கிணைந்த தேடுதலுக்கு பிறகும் இந்த விமானம் குறித்தோ அதில் பயணித்த பயணிகள் குறித்தோ எந்த உறுதியான தகவலும் இல்லாத நிலையில், தற்போது இது தொடர்பாக கோலாலம்பூரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு இந்த விமானம் இந்திய பெருங்கடலில் நொறுங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேடுதலின் போது விமானத்தை குறித்தோ, அதில் பயணித்தவர்கள் குறித்தோ எந்த உறுதியான தகவலும் இல்லாததால் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. 
 
இது தொடர்பாக கோலாலம்பூர் மற்றும் கெடாவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேஷிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவருக்கும் 22 முதல் 55 வயது இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.