பறவைகள் மூலமாகவும் மலேரியா நோய் பரவும் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்


Murugan| Last Modified சனி, 26 மார்ச் 2016 (12:13 IST)
மலேரியா நோக் கொசுக்கள் மூலம் மட்டுமல்ல, அந்த நோய் பறவைகள் மூலமாகவும் பரவும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 
மனிதர்களுக்கு கொசுக்கள் மூலமாக மட்டுமே மலேரியா நோய் பரவுகிறது என்கிற கருத்து பொதுவாகவே இருக்கிறது. இதுபற்றி, அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
 
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள், வவ்வால்கள் மற்றும் பாலூட்டி இன விலங்குகளிடம் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
 
அந்த ஆய்வில், அவைகளிடம் மலேரியா நோயை பரப்பும் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்திய போது, மலேரியா நோய் முதலில் பறவைகளிடம் இருந்துதான் பரவுகிறது என்றும் அதன்பின் அவை வவ்வால்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு பரவுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
 
ஆனால், மனிதர்களுக்கு எதன் மூலம் அதிகம் பரவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :