செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:27 IST)

லண்டனில் மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு: இந்தியத் தூதரகம் கண்டனம்

லண்டனில் மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு: இந்தியத் தூதரகம் கண்டனம்
லண்டனின் டேவிஸ்டாக் சதுக்கத்தில்  உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
லண்டனில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையின் பீடத்தில் சில அவமதிப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது நேற்று கண்டறியப்பட்டது. இந்த செயலுக்கு லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.  "லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம், டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட இந்த வெட்கக்கேடான செயலை ஆழ்ந்த வருத்தத்துடன் கடுமையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தியத் தூதரகம் இந்தச் செயலை ஒரு சாதாரண நாசவேலை என்று மட்டும் கருதவில்லை. நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சிலையை மீண்டும் அதன் அசல் நிலைக்கு கொண்டுவர இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து ஒருங்கிணைத்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி, லண்டனில் உள்ள இந்த சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியும், காந்திக்கு பிடித்த பஜன்களை பாடியும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.
 
Edited by Siva