வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (07:25 IST)

ராமர் பிறந்தது அயோத்தி அல்ல, பாகிஸ்தான்: முண்டாசு கட்டும் முஸ்லீம் தலைவர்

இந்துக்களின் கடவுளான ராமர் பிறந்தது அயோத்தியில் அல்ல. அவர்  பாகிஸ்தானில் தான் அவரித்தார் என புத்தக வடிவில் ஒரு புயல் கிளம்பியுள்ளது.
 

 
இந்து மக்களின் தலையாய கடவுள் ராமர். இந்து மக்கள் ராமரை தங்களது கடவுளாக வழிபாடு நடத்துகின்றனர். இந்த நிலையில், இந்துக் கடவுளான ராமர் பிறந்தது அயோத்தியில் அல்ல. பாகிஸ்தானில் தான் என்று அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி் தனது புத்தகத்தில் மத மோதல்களுக்கு வழிவகைக்கும் வகையில் எழுதியுள்ளார்.
 
இந்து மதத்தில் மிகவும் நம்பிக்கை கொண்ட பாஜக தற்போது, மத்திய அரசில் உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு  நிலுவையில் உள்ள போது, இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அய்யோ.... ராமா....உனக்கு இப்படி ஒரு சோதனையா?