1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: வியாழன், 16 ஜூலை 2015 (12:37 IST)

விமானத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்த ஏழுமலையான் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள்

வாஷிங்டனில் இருந்து டெல்லாஸ் செல்லும் விமானத்தில் ஏழுமலையான் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், பயணிகளைப் போல டிக்கெட் எடுத்து, இருக்கையில் சிலைகள் வைக்கப்பட்டு பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் ஸ்ரீனிவாச கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதியின் பஞ்சலோக சிலை, புதிதாக வடிவமைத்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.
 
வாஷிங்டனில் லோட்டஸ் கோவிலில் இந்த சிலைகளுக்கு பிராண பிரதிஷ்டை செய்து பின்னர் டெல்லாஸ் நகருக்கு அனுப்பப்பட்டது. சிலைகளை காரில் சிலைகளை டெல்லாஸ் நகருக்கு அனுப்பினால் 24 மணி நேரம் ஆகும் என்பதால் விமானத்தில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வாஷிங்டனில் இருந்து டெல்லாஸ் செல்லும் விமானத்தில் சாதாரண பயணிகள் போல வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி பெயரில் 3 டிக்கெட் வாங்கப்பட்டது. பின்னர் மூன்று சிலைகளையும், மூன்று இருக்கையில் வைத்து டெல்லாஸ் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.