விவாகரத்து மனைவிக்கு ரூ.3750 கோடி ஜீவனாம்சம்: லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு


sivalingam| Last Modified திங்கள், 15 மே 2017 (06:01 IST)
இங்கிலாந்து நாட்டின் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கு விவாகரத்து ஆன அவரது மனைவிக்கு ரூ.3750 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


லண்டனை சேர்ந்த தொழிலதிபர் கடந்த 1989ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் லண்டன் பல்கலையில் படித்து வருகின்றனர்.

சுமர் 28 வருடங்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய இந்த தம்பதிகள் தற்போது கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்றபோது, இவரது மனைவி தரப்பு  தனது கணவருக்கு சுமார் 8 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும், அதில் தனக்கும் சமபாதி உரிமை இருப்பதால் குழந்தைகளின் நலன் கருதி அதில் பாதி பங்கை வழங்க வேண்டும் என்றும் வாதாடியது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தொழிலதிபரின் மனைவி சொகுசாக வாழ ரூ.3,750 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தொகை அந்த தொழில் அதிபரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 41.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதில் மேலும் படிக்கவும் :