செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2025 (10:39 IST)

உலக பில்லியனர்கள் பட்டியல்! எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய லேரி எலிசன்! - யார் இவர்?

Grok AI Musk

உலக பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளியுள்ளார் லேரி எலிசன்.

 

உலகளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர் தொழிலதிபர்களின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக முன்னணியில் இருந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு கீழிறங்கியுள்ளார்.

 

ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முதல் இடத்தை அடைந்துள்ளார். எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டாலர்கள். லேரி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் டாலர்கள். சமீபமாக ஆரக்கிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் 43 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளதால் இந்த பட்டியல் மாற்றம் நடந்துள்ளது,.

 

மேலும் இந்த ஆண்டில் ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே எழுந்த மோதல் காரணமாக விதிக்கப்பட்ட வரி மற்றும் டாட்ஜ் நிர்வாகியாக மஸ்க் செயல்பட்டதால் ஏற்பட்ட சொந்த நிறுவன இழப்புகள் ஆகியவை மஸ்க்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K