118 பயணிகளுடன் கடத்தப்பட்ட லிபியன் விமானம்


Murugan| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (18:41 IST)
லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி என்ற நகருக்கு புறப்பட்ட லிபியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
விமானத்தில் வந்த இருவர்தான் அந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அந்த விமானம் மால்டா விமான நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தீவிரவாதிகளின்  பிடியில் பயணிகள் சிக்கியுள்ளனர்.
 
அந்த விமானத்தில் மொத்தம் 7 விமான பணியாளர் மற்றும்  மொத்தம் 118 பயணிகள் இருந்தனர்.  அந்த விமானத்தை வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்வோம் என அந்த தீவிரவாதிகள் மிரட்டி வருவதாகவும், அதில் ஒருவர் கை எறி குண்டை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து, மால்டா விமான நிலையத்தில் அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், விமானத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தீவிரவாதிகள் வெளியே அனுப்ப ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :