வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 மே 2016 (14:59 IST)

நான் பதவியேற்கும் வரை திருமணங்கள், இறுதிச் சடங்குகள் நடக்கக்கூடாது - அதிபரின் உத்தரவு

தனது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் வரையில், நாட்டில் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்கும்படி வடகொரிய அதிபர் கிம் ஜா ங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 
வடகொரியா நாட்டு அதிபராக, உழைப்பாளர் கட்சியை சேர்ந்த கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது அதிரடி நடவடிக்கையை கண்டு உலக வல்லரசுகள் கூட மிரண்டு வருகின்றன.
 
சமீபத்தில், நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தாக்கும் சக்தி படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. மேலும், உலக நாடுகளின் பொருளாதாரா தடையை மீறி 5ஆவது அணுகுண்டு சோதனையை நடத்த அந்நாடு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
 
வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முதன் முதலாக பொதுவெளியில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் வெள்ளியன்று நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின் பாதுகாப்புகருதி, தான் பதவியேற்கும் வரை நாட்டில் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது என கிம் ஜாங் தனதுநாட்டு மக்களுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.