வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (06:56 IST)

டிரம்ப் உதவியாளருக்கு இந்திய தூதர் பதவி: வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் உதவியாளராக இருந்தவர் இந்தியாவின் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பு ஒன்று உறுதி செய்துள்ளது



 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக இதுவரை இருந்த கென்னத் ஐ ஜஸ்டெர் என்பவர் இனி இந்தியாவுக்கான தூதராக பணிபுரிய உள்ளார். தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக தற்போது ரிச்சர்ட் வெர்மா என்பவருக்கு பதிலாக கென்னத் ஐ ஜஸ்டெர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே டிரம்ப் உதவியாளராக மட்டுமின்றி அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் இருந்தவர்

இதற்கான முறையான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ள கென்னத் ஐ ஜஸ்டெர், இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் முக்கிய காரணியாக இருந்துள்ளார்.